/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
இயக்குநர் ஷங்கர் வீட்டிற்கு மிரட்டல்
/
இயக்குநர் ஷங்கர் வீட்டிற்கு மிரட்டல்
ADDED : நவ 14, 2025 11:58 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நீலாங்கரை: சென்னை காவல் துறை தலைமையகத்திற்கு, நேற்று காலை, மின்னஞ்சல் ஒன்று வந்தது. அதில், கிழக்கு கடற்கரை சாலை, ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள திரைப்பட இயக்குநர் ஷங்கர், நடன இயக்குனர்கள் பிருந்தா, கலா ஆகியோரின் வீட்டிற்கு வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையடுத்து, வெடிகுண்டு நிபுணர்கள், மோப்பநாய் உதவியுடன் மூவரின் வீடுகளில் சோதனை நடத்தினர். வெடி பொருட்கள் எதுவும் கிடைக்காததால், மிரட்டல் வெறும் புரளி என்பது தெரிய வந்தது.

