ADDED : டிச 26, 2024 12:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொளத்துார்: கொளத்துார், ஜி.கே.எம்., காலனியைச் சேர்ந்தவர் பாலு, 70. நேற்று முன்தினம் இரவு, எஸ்.ஆர்.பி., காலனி பிரதான சாலையில் நடந்து சென்றுக்கொண்டிருந்தார். அப்போது, திடீரென மயங்கி சாலையில் விழுந்துள்ளார்.
அப்போது, அந்த சாலை வழியே சென்ற 'இன்னோவா' காரின் பின் சக்கரம், பாலு தலை மீது ஏறி இறங்கியது. சம்பவ இடத்திலேயே பாலு பலியானார்.
விபத்து குறித்து, வில்லிவாக்கம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
இதில், காரை ஓட்டி வந்தது, விநாயகபுரத்தை சேர்ந்த கார்த்திக், 35, என்பதும், மணலியில் உள்ள 'தோஷிபா' நிறுவனத்திலிருந்து, ஊழியர்களை பெரியார் நகரில் இறக்கி விட்டு திரும்ப சென்றதும் தெரியவந்தது.

