/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மின் இணைப்புக்கான ' டிபாசிட் ' தராமல் முதியவர் அலைக்கழிப்பு
/
மின் இணைப்புக்கான ' டிபாசிட் ' தராமல் முதியவர் அலைக்கழிப்பு
மின் இணைப்புக்கான ' டிபாசிட் ' தராமல் முதியவர் அலைக்கழிப்பு
மின் இணைப்புக்கான ' டிபாசிட் ' தராமல் முதியவர் அலைக்கழிப்பு
ADDED : ஜூலை 09, 2025 01:04 AM
சென்னை, மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட, 72 வயதான மின் நுகர்வோருக்கு வைப்புத் தொகையை, ஒன்பது மாதங்களாகியும் திருப்பி தராமல், மின் வாரியம் அலைக்கழிக்கிறது.
அண்ணா நகரில் உள்ள மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில், மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம், நேற்று நடந்தது.
சென்னை மேற்கு மேற்பார்வை பொறியாளர் சித்ரா தலைமையில் நடந்த கூட்டத்தில், 10க்கும் மேற்பட்ட மின் நுகர்வோர் பங்கேற்று, தங்களின் குறைகளை தெரிவித்தனர்.
இதில்புகாரளித்த பின், அண்ணா நகர் கிழக்கு பகுதியைச் சேர்ந்த சிவசாமி, 72, என்பவர் கூறியதாவது:
என் வீட்டில், மூன்று மின் இணைப்புகள் இருந்தன. கூடுதலாக கட்டணம் செலுத்துவதால், அதில் ஒரு இணைப்பை திரும்ப பெறுமாறு கூறினேன். மின் ஊழியர்கள் ஒரு இணைப்பை துண்டித்து, மீட்டரை கழற்றி சென்றனர்.
அந்த இணைப்புக்கான வைப்புத் தொகையை, ஆறு மாதங்களில் திரும்ப செலுத்தப்படும் என்றனர். ஒன்பது மாதங்கள் ஆகியும், வைப்புத் தொகையை திரும்ப தரவில்லை. எத்தனை முறை சென்றாலும், ஒரே பதிலைதான் திரும்ப திரும்ப சொல்கின்றனர். வயதான நான் எத்தனை முறை அலைய வேண்டியுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
அண்ணா நகரைச் சேர்ந்த ஹுமேரா,65, என்பவர் கூறியதாவது:
அண்ணா நகர் 28வது தெருவில், புதிதாக குடி வந்துள்ளோம். என் மொபைல் போனுக்கு மின் கட்டணமாக 9,723 ரூபாய் வந்துள்ளது. அதேசமயம், மின் கணக்கீட்டு அட்டையில் 15,071 ரூபாய் என குறிப்பிட்டுள்ளனர். இது குறித்து கேட்டால், வேறு ஒருவருடைய 'பில்' உங்களுக்கு வந்துள்ளது என்றனர். அதை சரி செய்வதாக தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.