/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சேலை தடுக்கி விழுந்த மூதாட்டி குடிநீர் லாரி ஏறி பலி
/
சேலை தடுக்கி விழுந்த மூதாட்டி குடிநீர் லாரி ஏறி பலி
சேலை தடுக்கி விழுந்த மூதாட்டி குடிநீர் லாரி ஏறி பலி
சேலை தடுக்கி விழுந்த மூதாட்டி குடிநீர் லாரி ஏறி பலி
ADDED : டிச 28, 2025 05:05 AM
மாதவரம்: சாலையில் நடந்து சென்ற மூதாட்டி, கட்டியிருந்த சேலை தடுக்கி விழுந்ததில், பின்னால் வந்த குடிநீர் லாரி ஏறி பரிதாபமாக பலியானார்.
மாதவரம், மந்தைவெளி பகுதியைச் சேர்ந்தவர் சரளா, 60. இவர், நேற்று மதியம், வீட்டருகே உள்ள மருந்தகத்தில் மாத்திரை வாங்கி, வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
மாதவரம் நெடுஞ்சாலையில் நடந்து சென்றபோது, கட்டியிருந் த சேலை காலில் சிக்கியதில் இடறி கீழே விழுந்துள்ளார். அப்போது, பின்னால் வந்த குடிநீர் லாரி, கண்ணிமைக்கும் நேரத்தில் சரளா மீது ஏறி இறங்கியது.
இதில் சம்பவ இடத்திலேயே சரளா பலியானார். சம்பவத்தை தொடர்ந்து, லாரி ஓட்டுநர் அங்கிரு ந்து தப்பியோடினார். மாதவரம் போக்குவரத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.