/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மருந்தியல் கவுன்சிலுக்கு ஜூனில் தேர்தல்
/
மருந்தியல் கவுன்சிலுக்கு ஜூனில் தேர்தல்
ADDED : பிப் 09, 2025 12:40 AM
சென்னை,தமிழ்நாடு மருந்தியல் கவுன்சிலில், 1.10 லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர். இதில், நீதிமன்ற வழக்கு போன்ற பல்வேறு காரணங்களுக்காக, 2009ம் ஆண்டுக்கு பின் தேர்தல் நடைபெறாமல் இருந்தது.
தற்போது, அப்பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தொடர்ந்து, 15 ஆண்டுகளுக்கு பின், வரும் ஜூன் மாதம் தேர்தல் நடத்த மருந்தியல் கவுன்சில் நடவடிக்கை எடுத்து உள்ளது.
அதன்படி, பதிவு செய்த மருந்தாளுனர்களில் இருந்து, தலைவர், செயலர் என்ற அடிப்படையில் ஆறு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இதற்கான தேர்வு நடவடிக்கைகள் மார்ச் மாதம் துவங்கும் என, கவுன்சில் அதிகாரிகள் தெரிவித்தனர்.மேலும், மின்னணு ஓட்டுப்பதிவு வாயிலாக, தேர்தல் நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

