/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
எலக்ட்ரிக் ஸ்கூட்டர் புழலில் தீக்கிரை
/
எலக்ட்ரிக் ஸ்கூட்டர் புழலில் தீக்கிரை
ADDED : டிச 08, 2024 12:26 AM

புழல், புழல் அருகே, புத்தகரம் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த ஆடிட்டரான ராஜ்குமார், 35, என்பவர், நேற்று முன்தினம் இரவு 'ஹீரோ' நிறுவன எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் பயணித்தார்.
அம்பத்துாரில் கிளம்பிய அவர், புத்தகரம் அருகே சர்வீஸ் சாலையில் வந்த போது, ஸ்கூட்டரில் இருந்து திடீரென தீப்பொறி வந்தது. சிறிது நேரத்தில், ஸ்கூட்டர் தீப்பற்றி எரிய ஆரம்பித்தது.
சுதாரித்த அவர், ஸ்கூட்டரை சாலையில் நிறுத்தியதும், வாகனம் கொழுந்துவிட்டு எரிந்தது. ராஜ்குமாரும், அப்பகுதியைச் சேர்ந்தோரும் தீயை அணைக்க முயற்சித்ததோடு, தீயணைப்பு துறைக்கும் தகவல் அளித்தனர்.
கொளத்துார் தீயணைப்பு துறையினர் வந்து தீயை அணைப்பதற்குள், ஸ்கூட்டர் எலும்புக்கூடானது. ஸ்கூட்டர் தீப்பிடித்தது குறித்து புழல் போலீசார் விசாரிக்கின்றனர்.