/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மின்சார ரயில்கள் 25ம் தேதி குறைப்பு
/
மின்சார ரயில்கள் 25ம் தேதி குறைப்பு
ADDED : டிச 24, 2024 12:47 AM
சென்னை, சென்னை புறநகர் பகுதிகளில் தினமும், 500க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும், ஞாயிறு மற்றும் பண்டிகைகளில், தேசிய விடுமுறை விடுமுறை நாட்களில் வழக்கமாக, 40 சதவீத ரயில்கள் குறைத்து இயக்கப்படும்.
அந்த வகையில், நாளை கிறிஸ்துமஸ் பண்டிகை, தேசிய விடுமுறை என்பதால், சென்னை கடற்கரை - செங்கல்பட்டு, சென்ட்ரல் - அரக்கோணம், சூலுார்பேட்டை, வேளச்சேரி என அனைத்து மின்சார ரயில் தடத்திலும், ஞாயிறு கால அட்டவணைப்படி மின்சார ரயில்கள் இயக்கப்படும்.
இதேபோல், ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் அனைத்தும் வரும் 11ம் தேதி காலை 8:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை ஒரு ஷிப்ட் மட்டுமே இயங்கும் என சென்னை ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.