ADDED : மார் 27, 2025 12:14 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மின்ட்சவுக்கார்பேட்டை, மின்ட் தெருவில் நுாற்றுக்கணக்கான குடியிருப்புகள், கடைகள் உள்ளன. இப்பகுதிக்கு, மின்பெட்டி வாயிலாக மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
நேற்று மின்ட் தெரு, நயா மந்திர் ஜெயின் கோவில் அருகே மின் பெட்டியில் மின் கசிவு ஏற்பட்டு தீ பற்றி எரிந்தது. தீ மளமளவென பரவி மின்பெட்டி கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது. இதை பார்த்து பொதுமக்கள் அலறியடித்து ஓடினர். மின் வாரிய ஊழியர்கள் விரைந்து, மின்சாரத்தை துண்டித்தனர். வண்ணாரப்பேட்டை தீயணைப்பு துறையினர் விரைந்து தீயை அணைத்தனர்.