/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
விமான நிலைய 'மெட்ரோ' மதுக்கூடத்தில் மின் கசிவு
/
விமான நிலைய 'மெட்ரோ' மதுக்கூடத்தில் மின் கசிவு
ADDED : மே 20, 2025 01:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, மே 20-
சென்னை விமான நிலைய வளாகத்திற்குள், விமான நிலைய மெட்ரோ ரயில் நிலையம் இயங்குகிறது. இதன் தரைத்தளத்தில் ஹோட்டல்கள் மற்றும் சிறிய மதுக்கூடம் ஒன்று உள்ளது.
இந்த மதுக்கூடத்தில் நேற்று மாலை மின்கசிவு ஏற்பட்டு, புகை வெளியேறியது. அங்கிருந்தோர், அவசர அவசரமாக வெளியேறியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, மாநில தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
பின் சென்னை விமான நிலைய தீயணைப்பு பிரிவினர், தாம்பரம் தீயணைப்பு பிரிவினர் விரைந்து, மதுக்கூடத்தின் உள்பகுதியில் உள்ள மின் இணைப்பை உடனடியாக துண்டித்தனர். புகை வந்த இடத்தில், தண்ணீர் அடித்து கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.