/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கமிஷனர் அலுவலகம் முன் எலக்ட்ரீஷியன் தற்கொலை முயற்சி
/
கமிஷனர் அலுவலகம் முன் எலக்ட்ரீஷியன் தற்கொலை முயற்சி
கமிஷனர் அலுவலகம் முன் எலக்ட்ரீஷியன் தற்கொலை முயற்சி
கமிஷனர் அலுவலகம் முன் எலக்ட்ரீஷியன் தற்கொலை முயற்சி
ADDED : செப் 25, 2024 12:27 AM
சென்னை :சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் முன் நேற்று, 11:45 மணியளவில், 45 வயது மதிக்கத்தக்க நபர், திடீரென மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு, தீக்குளிக்க முயன்றார். அவரை பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார் மீட்டனர்.
விசாரணையில் அவர், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த செல்வராஜ், 45; எலக்ட்ரீஷியன் என தெரிந்தது.
போலீசாரிடம் அவர் அளித்த மனுவில் 'கடந்த, 2018ல், காடுவெட்டி குரு இறந்த அன்று,
நான் கலவரத்தில் ஈடுபட்டது போன்று, என் மீது போலீசார் பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்தனர்.
நான் எந்த கலவரத்திலும் ஈடுபடவில்லை. பா.ம.க., நகர செயலர் கோபாலன் என்பவர், எனக்கு கொலை மிரட்டல் விடுத்தார். என் உயிருக்கும், என் குடும்பத்தினருக்கும் ஆபத்து உள்ளது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கூறியுள்ளார்.