/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கிண்டியில் வரும் 13ல் மின் குறைதீர் கூட்டம்
/
கிண்டியில் வரும் 13ல் மின் குறைதீர் கூட்டம்
ADDED : மே 11, 2025 12:38 AM
சென்னை, சென்னை அண்ணா சாலை, அண்ணா நகர், கிண்டியில் நாளை மறுதினம் காலை 11:00 மணிக்கு மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடக்கிறது.
அண்ணா சாலைக்கான செயற்பொறியாளர் அலுவலகம், சிந்தாதிரிப்பேட்டை லபாண்ட் தெருவிலும், அண்ணா நகருக்கான செயற்பொறியாளர் அலுவலகம், அண்ணா நகர் 11வது பிரதான சாலை, ஐந்தாவது தெருவிலும் செயல்படுகின்றன.
அதேபோல், கிண்டிக்கான செயற்பொறியாளர் அலுவலகம், கே.கே.நகர், 110 கிலோ வோல்ட் துணைமின் நிலைய வளாகத்தில், இரண்டாவது தளத்தில் செயல்படுகிறது.
மேற்கண்ட மூன்று இடங்களில் நடக்கும் மின் குறைதீர் கூட்டத்திற்கு, அந்தந்த பகுதிகளில் வசிப்போர் பங்கேற்று, மின் வெட்டு, மீட்டர் பழுது உள்ளிட்ட மின்சாரம் தொடர்பான குறைகளை, வாரிய அதிகாரிகளிடம் தெரிவித்து பயன் பெறலாம்.