ADDED : ஆக 04, 2025 02:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:மயிலாப்பூர், கே.கே.நகர் ஆகிய இடங்களில் நாளை காலை, 11:00 மணிக்கு மின் நுகர்வோர் குறைதீர் கூட்டங்கள் நடக்கின்றன.
மயிலாப்பூருக்கான கூட்டம், செயற்பொறியாளர் அலுவலகம், எண். 97, 110 கிலோ வோல்ட் திறன் வள்ளுவர் கோட்டம் துணை மின் நிலைய வளாகம், கோடம்பாக்கம் நெடுஞ்சாலை என்ற முகவரியில் நடக்கிறது.
கே.கே.நகருக்கான குறைதீர் கூட்டம், செயற்பொறியாளர் அலுவலகம், 2வது தளம் 110 கிலோ வோல்ட் திறன் துணை மின் நிலைய வளாகம், கே.கே.நகர் என்ற முகவரியில் நடக்கிறது.
இப்பகுதிகளில் வசிப்போர், இந்த குறைதீர் கூட்டங்களில் பங்கேற்று, மின்சாரம் தொடர்பான குறைகளை வாரிய அதிகாரிகளிடம் தெரிவித்து, பயன்பெறலாம்.