/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
முதல்வர் பிறந்த நாள் விழா கொக்கி போட்டு மின் திருட்டு
/
முதல்வர் பிறந்த நாள் விழா கொக்கி போட்டு மின் திருட்டு
முதல்வர் பிறந்த நாள் விழா கொக்கி போட்டு மின் திருட்டு
முதல்வர் பிறந்த நாள் விழா கொக்கி போட்டு மின் திருட்டு
ADDED : ஏப் 02, 2025 11:48 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவிலம்பாக்கம், முதல்வர் பிறந்த நாள் விழா, பரங்கிமலை தெற்கு ஒன்றிய தி.மு.க., சார்பில், கோவிலம்பாக்கத்தில் நேற்று நடந்தது. இதில், இசை நிகழ்வுடன், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இக்கூட்டத்திற்காக, கோவிலம்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியின் எதிரில், ஒரு பக்க சாலையை தடுத்து மேடை அமைத்திருந்தனர்.
தவிர, சாலையில் துளையிட்டு, மூன்று இடங்களில் ஒளிரும் 'கட் அவுட்' அமைத்துள்ளதோடு, அனுமதியின்றி மின் கம்பியில் இருந்து, கொக்கி போட்டு மின்சாரம் திருடப்பட்டது.
எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், உரிய நபரின் மீது, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் வலியுறுத்தினர்.