/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நிறுவனத்தில் ரூ.6.47 லட்சம் மோசடி செய்த ஊழியர் கைது
/
நிறுவனத்தில் ரூ.6.47 லட்சம் மோசடி செய்த ஊழியர் கைது
நிறுவனத்தில் ரூ.6.47 லட்சம் மோசடி செய்த ஊழியர் கைது
நிறுவனத்தில் ரூ.6.47 லட்சம் மோசடி செய்த ஊழியர் கைது
ADDED : செப் 16, 2025 01:13 AM
புதுவண்ணாரப்பேட்டை;தனியார் நிறுவனத்தில், 6.47 லட்சம் ரூபாய் மோசடி செய்த ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
தண்டையார்பேட்டை, வ.உ.சி.நகரைச் சேர்ந்தவர் குமரேசன், 52. இவர், அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.
இவரது நிறுவனத்தில், கலெக் ஷன் ஏஜன்டாக திருவொற்றியூரைச் சேர்ந்த தீபக், 26 என்பவர், கடந்த 2023ம் ஆண்டு முதல் 2024ம் ஆண்டு வரை பணிபுரிந்தார்.
அப்போது கடைகளில் வசூல் செய்த, 6.47 லட்சம் ரூபாயை தீபக் நிறுவனத்தில் செலுத்தாமல் மோசடி செய்துள்ளார். இது தொடர்பாக நிறுவன மேலாளர் குமரேசன், 2025ல் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கை பதிந்து விசாரிக்கும்படி, புதுவண்ணாரப்பேட்டை போலீசாருக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து, புதுவண்ணாரப்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து நடத்திய விசாரணையில், தீபக் மோசடியில் ஈடுபட்டது உறுதியானது. இதையடுத்து, தலைமறைவாக இருந்த தீபக்கை, போலீசார் நேற்று கைது செய்தனர்.