/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
காலி மது பாட்டிலை திரும்ப பெற எதிர்ப்பு கடை திறக்காமல் ஊழியர்கள் போராட்டம்
/
காலி மது பாட்டிலை திரும்ப பெற எதிர்ப்பு கடை திறக்காமல் ஊழியர்கள் போராட்டம்
காலி மது பாட்டிலை திரும்ப பெற எதிர்ப்பு கடை திறக்காமல் ஊழியர்கள் போராட்டம்
காலி மது பாட்டிலை திரும்ப பெற எதிர்ப்பு கடை திறக்காமல் ஊழியர்கள் போராட்டம்
ADDED : ஜன 07, 2026 05:43 AM

சென்னை: காலி மது பாட்டிலை திரும்ப பெறும் திட்டத்தை எதிர்த்து, நேற்று 'டாஸ்மாக்' ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், கடைகள் திறக்கப்படவில்லை. பேச்சில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து, இரவு 7:00 மணியளவில் திறக்கப்பட்டது.
சென்னையில் உள்ள வடக்கு, தெற்கு, மத்திய மாவட்டங்களில் உள்ள மது கடைகளில் காலி மது, பாட்டில் திரும்ப பெறும் திட்டம், நேற்று முதல் அமலுக்கு வருவதாக 'டாஸ்மாக்' அறிவித்தது. இதுவரை, 29 மாவட்டங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்கங்களின் ஊழியர்களும், சென்னை அம்பத்துாரில் உள்ள மாவட்ட மேலாளர் அலுவலகங்கள் முன், நேற்று காலை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த திட்டத்தால் தங்களுக்கு பணிச்சுமை அதிகரித்திருப்பதாகவும், காலி மதுபாட்டில்களை தேக்கி வைக்க கட்டமைப்பு வசதிகள் இல்லை எனவும் கூறி, கண்டன கோஷம் எழுப்பினர். போராட்டத்தில் 1,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதனால், சென்னை முழுதும் உள்ள, 'டாஸ்மாக்' கடைகள் திறக்கப்படவில்லை. இதையறியாமல் மது பிரியர்கள் கடைகள் முன் குவியத் துவங்கினர். கடைகள் திறக்கப்படாததால், அவர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது.
இதையடுத்து சங்கங்களின் நிர்வாகிகளுடன், டாஸ்மாக் சென்னை மண்டல மற்றும் மாவட்ட மேலாளர்கள் பேச்சு நடத்தினர். அதில், ஐந்து நாட்கள் இத்திட்டத்தை அமல்படுத்துவதில் இருந்து ஒத்திவைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், காலி பாட்டிலை திரும்ப பெறும் பணிக்கு, தனி ஊழியர்களை நியமிப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, இரவு 7:00 மணியளவில், டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன.
சென்னை டாஸ்மாக் ஊழியர் சங்க தலைவர் பாலகிருஷ்ணன் கூறியதாவது:
முதற்கட்ட பேச்சின் போது, நாங்கள் கூறியதை அதிகாரிகள் பொருட்படுத்தவில்லை.
'கடையை திறக்க வேண்டும்... கடையை திறக்க வேண்டும்...' என திரும்ப திரும்ப அதிகாரிகள் கூறினர்.
இவ்வாறு அவர் கூறினார்.
'16 வயதினிலே' வசனத்தால் கலகலப்பு
சென்னை டாஸ்மாக் ஊழியர் சங்க தலைவர் பாலகிருஷ்ணன் கூறியதாவது:
முதற்கட்ட பேச்சின் போது, நாங்கள் கூறியதை அதிகாரிகள் பொருட்படுத்தவில்லை. இதைவிடுத்து, '16 வயதினிலே' படத்தில் வரும் 'ஆத்தா வையும் காசு குடு' என்கிற வசனத்தை நடிகர் கமல் திரும்ப, திரும்ப பேசுவது போல், அதிகாரிகள், 'கடையை திறக்க வேண்டும்... கடையை திறக்க வேண்டும்...' என திரும்ப திரும்ப கூறினர்.
இவ்வாறு அவர் கூறினார்.

