/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தலைமறைவு குற்றவாளி ஏர்போர்ட்டில் சிக்கினார்
/
தலைமறைவு குற்றவாளி ஏர்போர்ட்டில் சிக்கினார்
ADDED : ஜன 07, 2026 05:44 AM

திருமங்கலம்: திருமங்கலம், பார்க் சாலை அருகில் போதை பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசார், கடந்த நவ., 11ம் தேதி சோதனை நடத்தினர். அப்போது, போதை ஸ்டாம்புடன் பாடியைச் சேர்ந்த தியானேஷ்வரன், 26 என்பவர் சிக்கினார். அவர் அளித்த தகவலின்படி, போதை பொருட்களை கடத்தி விற்பனையில் ஈடுபட்ட சரத், 30, முகமது மஸ்தான் ஷர்புதீன், 44, சீனிவாசன் 27, தினேஷ் ராஜ், 39, ஆகியோர், கடந்த 20ம் தேதி கைது செய்யப்பட்டனர்.
வழக்கில் தொடர்புடைய பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த அமர், 30, என்பவரை, போலீசார் தேடி வந்த நிலையில், வெளிநாட்டிற்கு தப்பி சென்றது தெரிந்தது. இதையடுத்து, குற்றவாளி தொடர்பான 'லுக் அவுட்' நோட்டீஸ், கு டியுரிமை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று முன்தினம், சிங்கப்பூர் - சென்னை விமானத்தில் வந்த அமரை, விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் கைது செய்து, திருமங்கலம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
கைது செய்யப்பட்ட ஷர்புதீன் , நான்கு ஆண்டுகளுக்கு முன், நடிகர் சிம்புவிடம் உதவியாளராக பணியாற்றியவர். தினேஷ்ராஜ், 33 என்பவர், நடிகர் தனுஷின் அக்கா மகன் பவிஷ் நடித்து வரும், லவ் ஓ லவ் என்ற படத்தை தயாரித்து வருகிறார். இதற்கு முன், பிளாக்மெயில் என்ற படத்தை தயாரித்துள்ளார் என்பதும் தெரியவந்தது.

