/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தரமணியில் நாளை வேலைவாய்ப்பு முகாம்
/
தரமணியில் நாளை வேலைவாய்ப்பு முகாம்
ADDED : அக் 17, 2025 12:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: தமிழக அரசின், 'வெற்றி நிச்சயம்' திட்டத்தின் கீழ், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம், சென்னை தரமணியில் உள்ள சி.ஐ.டி., வளாகத்தில் நாளை நடக்கிறது.
அரசுடன், 'அஸ்கர்டியா பவுண்டேஷன்' இணைந்து முகாமை நடத்துகிறது. வேலைவாய்ப்பு இல்லாத, 2017 முதல் 2025 வரை பட்டம் பெற்ற இன்ஜினியரிங், கலை மற்றும் அறிவியல், டிப்ளமா, ஐ.டி.ஐ., முடித்தவர்கள் பங்கேற்கலாம். இதில், பல முன்னணி நிறுவனங்கள் பங்கேற்கின்றன.
பட்டதாரிகள் மற்றும் நிறுவனங்கள் 86675 11342 என்ற மொபைல் போன் எண், info@asgardiafoundation.org.in எனும் மின்னஞ்சல் மற்றும் www.asgardiafoundation.org.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.