/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாங்காடு, பட்டூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
/
மாங்காடு, பட்டூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
ADDED : மே 22, 2025 12:11 AM

குன்றத்துார் மாங்காடு, குன்றத்துார், மவுலிவாக்கம் பகுதிகளில், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதால், அப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, சாலையை விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, சில வாரங்களுக்கு முன், அமைச்சர்கள் வேலு, அன்பரசன் ஆகியோர், அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டு, ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டனர்.
அதைத் தொடர்ந்து, பல்வேறு பகுதிகளில், சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, மாங்காடு அடுத்த பட்டூரில் இருந்து மவுலிவாக்கம் செல்லும் சாலையின் இருபுறத்திலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி, நேற்று நடந்தது.
அப்போது, ஆக்கிரமிப்பு அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வியாபாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவர்களை சமாதானம் செய்து, அங்கிருந்து அப்புறப்படுத்தினர். தொடர்ந்து, ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி துவங்கியது.