/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பல்லாவரத்தில் 'ஏசி' ரயில் உரசிய விவகாரம் ரயில் நிலையங்களில் பொறியாளர்கள் ஆய்வு
/
பல்லாவரத்தில் 'ஏசி' ரயில் உரசிய விவகாரம் ரயில் நிலையங்களில் பொறியாளர்கள் ஆய்வு
பல்லாவரத்தில் 'ஏசி' ரயில் உரசிய விவகாரம் ரயில் நிலையங்களில் பொறியாளர்கள் ஆய்வு
பல்லாவரத்தில் 'ஏசி' ரயில் உரசிய விவகாரம் ரயில் நிலையங்களில் பொறியாளர்கள் ஆய்வு
ADDED : மே 27, 2025 12:23 AM
சென்னை, சென்னையில், 12 பெட்டிகள் கொண்ட முதல், 'ஏசி' மின்சார ரயில் சேவை, ஏப்., 19ல் துவங்கியது. முதலில் ஆறு சேவைகள் மட்டும் வழங்கப்பட்டன.
பின், சேவைகள் எண்ணிக்கை, 10 ஆக அதிகரிக்கப்பட்டது. இந்த ரயிலுக்கு பயணியரிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
இந்நிலையில், தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி வந்த, 'ஏசி' மின்சார ரயில், பல்லாவரம் ரயில் நிலையம் வந்தபோது, ரயிலின் படிகள் நடைமேடை விளிம்பில் மோதியதால் பெரும் சத்தம் ஏற்பட்டது. இதனால், பயணியர் அதிர்ச்சி அடைந்தனர்.
ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. நிலைய மேலாளர், பாயின்ட்மேன் ஆகியோர் சம்பவ இடம் விரைந்தனர்.
ரயில் முன்னும் பின்னு் இயக்கி சோதிக்கப்பட்டது. நடைமேடை விளம்பில், ஓரிடத்தில் உரசுவது கண்டறியப்பட்டது.
'ஏசி' ரயில் தொடர்ந்து செல்ல வசதியாக, நடைமேடையின் விளம்பு பகுதி, உடனே சீரமைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, 30 நிமிடம் தாமதமாக ரயில் புறப்பட்டு சென்றது.
இதற்கிடையே, தாம்பரம் - கடற்கரை தடத்தில் விரைவு பாதையில் உள்ள ரயில் நிலையங்களில், பொறியாளர்கள் நேற்று ஆய்வு செய்தனர்.
'ஏசி' மின்சார ரயில் இயக்கும்போது, ஏதாவது பாதிப்பு ஏற்படுகிறதா என சோதனை நடத்தினர்.
இதுகுறித்து, சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் கூறுகையில், 'பல்லாவரத்தில் நடைமேடை சீரமைப்பு பணி நடந்தது. அப்போது, நடைமேடை முகப்பு பகுதியை சரியாக நீக்காததே, ரயில் மீது உரசி சத்தம் ஏற்பட காரணம். மற்ற நிலையங்களில் எந்த பிரச்சனையும் இல்லை' என்றனர்.
***