sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

எண்ணுார் விரிவாக்க அனல்மின் நிலையம் திட்ட மதிப்பு ரூ.1,500 கோடி உயர்வு ஏன்? டிச., 20ல் கருத்து கேட்கிறது வாரியம்

/

எண்ணுார் விரிவாக்க அனல்மின் நிலையம் திட்ட மதிப்பு ரூ.1,500 கோடி உயர்வு ஏன்? டிச., 20ல் கருத்து கேட்கிறது வாரியம்

எண்ணுார் விரிவாக்க அனல்மின் நிலையம் திட்ட மதிப்பு ரூ.1,500 கோடி உயர்வு ஏன்? டிச., 20ல் கருத்து கேட்கிறது வாரியம்

எண்ணுார் விரிவாக்க அனல்மின் நிலையம் திட்ட மதிப்பு ரூ.1,500 கோடி உயர்வு ஏன்? டிச., 20ல் கருத்து கேட்கிறது வாரியம்


ADDED : நவ 15, 2024 01:37 AM

Google News

ADDED : நவ 15, 2024 01:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, ந

எண்ணுார் விரிவாக்க அனல்மின் நிலைய கட்டுமான பணியை குறித்த காலத்தில் முடிக்காததால், மின் வாரியத்திற்கு, 1,500 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்படுகிறது. இத்திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி பெற, அடுத்த மாதம், 20ம் தேதி, எர்ணாவூரில் மக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடக்க உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், எர்ணாவூரில், 660 மெகா வாட் திறனில் எண்ணுார் விரிவாக்க அனல்மின் நிலையம் அமைக்கும் பணியை, 2014ல் மின் வாரியம் துவக்கியது.

இதன் கட்டுமான பணியை, 'லேன்கோ' என்ற தனியார் ஒப்பந்த நிறுவனம் மேற்கொண்டது. இத்திட்டத்திற்கு, மத்திய சுற்றுச்சூழல் துறை, 2009 ஜூன், 3ல் அனுமதி வழங்கியது. இந்த அனுமதி, 10 ஆண்டுகள்.

நான்கு ஆண்டுகளுக்குள், மின் நிலைய பணிகளை முடிக்க வேண்டும். ஒப்பந்த நிறுவனம் நிதி நெருக்கடியில் சிக்கியதால், 17 சதவீத பணிகளுடன் எண்ணுார் மின் திட்டம், 2018ல் முடங்கியது. மீதி பணிகளை மேற்கொள்ளும் ஆணை, பி.ஜி.ஆர்., நிறுவனத்திற்கு, 2022 மார்ச்சில் வழங்கப்பட்டது.

அந்நிறுவனம் பணிகளை துவங்காததால், ஆணை ரத்து செய்யப்பட்டது. எண்ணுார் விரிவாக்க மின் திட்டத்திற்கு பெறப்பட்ட சுற்றுச்சூழல் துறை அனுமதி, 2019 ஜூனில் காலாவதியானது. தற்போது, கட்டுமான பணிகைளை துவக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு, சுற்றுச்சூழல் துறையிடம் மீண்டும் அனுமதி பெறப்பட உள்ளது.

எண்ணுார் விரிவாக்க மின் திட்டம் துவங்கிய போது திட்ட செலவு, 3,921 கோடி ரூபாயாக இருந்தது. தற்போது, 5,421 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக மின் வாரியம் மறுமதிப்பீடு செய்துள்ளது.

இதனால், திட்டமதிப்பு, 1,500 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது. இதற்கு கட்டுமான பொருட்களின் விலை அதிகரிப்பு என்று கூறப்பட்டாலும், தகுதியில்லாத நிறுவனங்களிடம் பணிகளை ஒப்படைத்த அதிகாரிகளின் அலட்சியமே முக்கிய காரணம்.

இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:

சுற்றுச்சூழல் அனுமதிக்கான அவகாசம் முடிந்த நிலையில், ஒப்பந்த நிறுவனத்தின் அலட்சியத்தால் பணிகளும் முடங்கின.

மக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்படாமல், எண்ணுார் மின் திட்டம் தொடர்வதாகவும், அத்திட்டத்தை ரத்து செய்யுமாறும், பசுமை தீர்ப்பாயத்தில் சிலர் வழக்கு தொடர்ந்தனர்.

அதை விசாரித்த தீர்ப்பாயம், கருத்து கேட்பு கூட்டம் நடத்தி, மக்களிடம் கருத்து கேட்டு, சுற்றுச்சூழல் துறைக்கு அனுப்புமாறு தெரிவித்தது.

ஆறு ஆண்டுகளாக பணிகள் முடங்கியுள்ள நிலையில், தற்போது, பொது - தனியார் கூட்டு முயற்சியில், மின் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. சுற்றுச்சூழல் அனுமதிக்கு, மக்கள் கருத்து கேட்பு கூட்டம், எர்ணாவூரில் வரும் டிச., 20ல் நடத்துவதாக, மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us