/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பட்டா கோரிய மனுக்களில் பிழை இ-சேவை மையத்திற்கு அறிவுறுத்தல்
/
பட்டா கோரிய மனுக்களில் பிழை இ-சேவை மையத்திற்கு அறிவுறுத்தல்
பட்டா கோரிய மனுக்களில் பிழை இ-சேவை மையத்திற்கு அறிவுறுத்தல்
பட்டா கோரிய மனுக்களில் பிழை இ-சேவை மையத்திற்கு அறிவுறுத்தல்
ADDED : ஜூன் 25, 2025 12:17 AM
சென்னை, இ-சேவை மையம் நடத்துவோர் மக்களிடம் அதிக கட்டணம் வசூலித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, வட்டாட்சியர்கள் கூறியுள்ளனர்.
மத்திய, மாநில அரசுகளின் சார்பில் மக்களுக்கு பல்வேறு சேவைகள் ஆன்-லைன் வழியாக வழங்கப்படுகின்றன. இதற்காக தமிழக அரசு கேபிள் 'டிவி' கார்ப்பரேஷன் சார்பில், அனைத்து தாலுகா அலுவலகங்கள் மற்றும் மத்திய அரசு சான்று பெற்ற இ-சேவை மையங்கள் செயல்படுகின்றன. இவற்றைத் தவிர்த்து, தனியார் மூலமாகவும் இ-- சேவை, பொது சேவை மையங்கள் நடத்தப்படுகின்றன.
இதில் பிறப்பு, இறப்பு, வருவாய், சாதி, வாரிசு, முதல் பட்டதாரி உள்ளிட்ட 20 வகையான பல்வேறு சான்றுகள் வழங்கப்படுகின்றன.
சமீபகாலமாக சாதி, வருவாய் மற்றும் பட்டா கோரி விண்ணப்பிப்பவர்கள் தவறான மற்றும் பிழையான சான்றுகளை தருவதால், வட்டாட்சியர்களுக்கு கூடுதல் சுமை ஏற்படுவதுடன், மக்களுக்கு போய் சேர வேண்டிய சலுகைகளும் சரியாக போய் சேர முடியாமல் போகிறது.
இதுகுறித்து சென்னையில் உள்ள வட்டாட்சியர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தியதன் பேரில், அந்தந்த வட்டாட்சியர்கள் இ- சேவை மையத்தினரை நேரில், அழைத்து பேசி வருகின்றனர்.
நேற்று மாதவரம் தாலுக்காவில் உள்ள இ- சேவை மையத்தினரை அழைத்த மாதவரம் வட்டாட்சியர், சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். சமீபத்தில் பெறப்பட்ட பட்டா கோரிய மனுவில் 80 மனுக்கள் பிழையாக வந்துள்ளதாக கூறினார்.
எந்த சான்று கோரி விண்ணப்பித்தாலும், சரியான அசல் சான்றுகளை இணைக்க வேண்டும் என்றும், தவறான தகவல்களை தர வேண்டாம்.
பொது மக்களிடம் அரசு அனுமதித்த கட்டணத்திற்கு மேல் வசூலித்தால், நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.