/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சிறந்த பணி: இரு ஆய்வாளர்கள் உட்பட 7 பேருக்கு கமிஷனர் அருண் பாராட்டு
/
சிறந்த பணி: இரு ஆய்வாளர்கள் உட்பட 7 பேருக்கு கமிஷனர் அருண் பாராட்டு
சிறந்த பணி: இரு ஆய்வாளர்கள் உட்பட 7 பேருக்கு கமிஷனர் அருண் பாராட்டு
சிறந்த பணி: இரு ஆய்வாளர்கள் உட்பட 7 பேருக்கு கமிஷனர் அருண் பாராட்டு
UPDATED : ஏப் 23, 2025 06:27 AM
ADDED : ஏப் 23, 2025 12:45 AM

சென்னை: சிறப்பாக பணியாற்றிய, இரண்டு ஆய்வாளர்கள் உட்பட, ஏழு போலீசாரை, கமிஷனர் அருண் அழைத்து, வெகுமதி வழங்கி பாராட்டினார்.
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து, கொலை முயற்சி செய்தது தொடர்பாக, அண்ணாநகர் மகளிர் காவல் நிலையத்தில், 2020ம் ஆண்டு புகார் அளிக்கப்பட்டது.
புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த ஆய்வாளர் தனலட்சுமி, குற்றத்தில் ஈடுபட்ட, 25 வயது வாலிபரை கைது செய்தார்.
இவ்வழக்கு விசாரணை, உயர்நீதிமன்றத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து வாலிபருக்கு, 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 20,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.
* ஆழ்வார்பேட்டையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில், 47 வயது பெண், 5வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்ய தயாராக நின்று கொண்டிருந்தார். இதையறிந்த கோடம்பாக்கம் போக்குவரத்து தலைமைக் காவலர் தேவராஜ் அவரை பத்திரமாக மீட்டு அவரது உறவினர்களிடம் சேர்த்தார்.
* திருவான்மியூரில் வானக தணிக்கையின்போது, ஆய்வாளர் ஜாகீர் உசேன் தலைமையிலான போலீசார் பைக் திருட்டில் ஈடுபட்ட தினேஷ், 21 என்பவரை கைது செய்து, இருசக்கர வாகனம் ஒன்றை பறிமுதல் செய்தனர்.
நேற்று சிறப்பாக செயல்பட்ட, இரு ஆய்வாளர்கள் உட்பட ஏழு போலீசாரை அழைத்து, கமிஷனர் அருண் வெகுமதி வழங்கி பாராட்டினார்.

