/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
புதுமைப்பெண் திட்ட விரிவாக்கம் மேலும் 2,025 மாணவியர் பயன்
/
புதுமைப்பெண் திட்ட விரிவாக்கம் மேலும் 2,025 மாணவியர் பயன்
புதுமைப்பெண் திட்ட விரிவாக்கம் மேலும் 2,025 மாணவியர் பயன்
புதுமைப்பெண் திட்ட விரிவாக்கம் மேலும் 2,025 மாணவியர் பயன்
ADDED : டிச 31, 2024 12:31 AM

சென்னை,
புதுமைப்பெண் விரிவாக்க திட்டத்தில் பயனடையும் கல்லுாரி மாணவியருக்கு, அமைச்சர் சேகர்பாபு பற்று அட்டையை நேற்று வழங்கினார்.
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் புதுமைப்பெண் திட்ட விரிவாக்கத்தை, துாத்துக்குடியில் தமிழக முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
அதை தொடர்ந்து, சென்னை மாவட்டத்தில், ராணிமேரி கல்லுாரியில் நடந்த விழாவில், அமைச்சர் சேகர்பாபு, மாணவியருக்கு பற்று அட்டைகளை வழங்கி, திட்டத்தை துவக்கி வைத்தார்.
இதுவரை, அரசு பள்ளியில் படித்த மாணவியர் பயனடைந்த திட்டத்தை, அரசு உதவிபெறும் பள்ளிகளிலும், தமிழ் வழியில் படித்த மாணவியர் பயன்பெறலாம்.
இவ்விரிவாக்கத் திட்டத்தில், சென்னை மாவட்டத்தில், அரசு உதவிபெறும் பள்ளிகளில், தமிழ் வழியில் படித்து, தற்போது 131 கல்லுாரிகளில் பலிலும், 2,025 மாணவியர் பயனடைய உள்ளனர்.
ஏற்கனவே உள்ள அரசு பள்ளி மாணவியருக்கான திட்டத்தில், 2023 - 24ல், 5,097 மாணவியர் பயன்பெற்று வருகின்றனர்.
நேற்று நடந்த துவக்க நிகழ்வில், சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே, தென்சென்னை தி.மு.க., - எம்.பி., தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் பங்கேற்றனர்.