/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மரங்களை வெட்டி சாய்க்காமல் வேரோடு பிடுங்கி நட எதிர்பார்ப்பு
/
மரங்களை வெட்டி சாய்க்காமல் வேரோடு பிடுங்கி நட எதிர்பார்ப்பு
மரங்களை வெட்டி சாய்க்காமல் வேரோடு பிடுங்கி நட எதிர்பார்ப்பு
மரங்களை வெட்டி சாய்க்காமல் வேரோடு பிடுங்கி நட எதிர்பார்ப்பு
ADDED : டிச 10, 2024 12:18 AM

சேலையூர், தென் மாவட்டங்களில் இருந்து வரும் சரக்கு மற்றும் பொது வாகனங்கள் பெருங்களத்துார், தாம்பரம் வழியாக சென்னைக்குள் நுழைந்து, இ.சி.ஆர்., - ஓ.எம்.ஆர்., சாலைகளில் பயணிப்பதில் சிக்கல் ஏற்படுகிறது.
இதற்கு மாற்றாக, பெருங்களத்துார், சதானந்தபுரம், ராஜகீழ்ப்பாக்கம் வழியாக, தாம்பரம் - வேளச்சேரி சாலையை அடையும் வகையில், தாம்பரம் கிழக்கு புறவழிச்சாலை திட்ட பணி நடந்து வருகிறது.
ஜி.எஸ்.டி., சாலையில், பெருங்களத்துார் புதிய பாலத்தை ஒட்டி துவங்கி, சதானந்தபுரம், ஆலப்பாக்கம், நெடுங்குன்றம், திருவஞ்சேரி, ராஜகீழ்ப்பாக்கம், சேலையூர் வழியாக வேளச்சேரி சாலையுடன் இணையும் வகையில், 75 கோடி ரூபாய் செலவில், இப்பணி நடந்து வருகிறது.
முதற்கட்ட பணியில், 60 சதவீதம் முடிந்துவிட்டது. இரண்டாம் கட்ட பணிக்காக, சேலையூர் அம்பேத்கர் நகர் சந்திப்பில் இருந்து ராஜகீழ்ப்பாக்கம் ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த, 126 கட்டடங்களை இடிக்கும் பணி, மூன்று நாட்களாக நடந்து வருகிறது.
கட்டடங்களை இடிக்கும் போது, அங்குள்ள கொய்யா, தென்னை, நெல்லி, வேப்பம், மாமரம் உள்ளிட்ட மரங்களை, பொக்லைன் வாகனங்களை கொண்டு வேரோடு சாய்க்கின்றனர்.
தாம்பரம் மாநகராட்சியில், பசுமை பகுதியை அதிகரிக்கும் நடவடிக்கையாக, வாரந்தோறும் ஆயிரக்கணக்கான மரக்கன்றுகள் நடப்படுகின்றன.
அப்படியிருக்கையில், ராஜகீழ்ப்பாக்கம் ஏரியில் உள்ள மரங்களையும் வேரோடு பிடுங்கி, வேறு இடங்களில் நட்டு பராமரிக்க, மாநகராட்சி முன்வர வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

