/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சரக்கு ரயில் தடம் புரண்டதால் விரைவு ரயில்கள் இயக்கம் தாமதம்
/
சரக்கு ரயில் தடம் புரண்டதால் விரைவு ரயில்கள் இயக்கம் தாமதம்
சரக்கு ரயில் தடம் புரண்டதால் விரைவு ரயில்கள் இயக்கம் தாமதம்
சரக்கு ரயில் தடம் புரண்டதால் விரைவு ரயில்கள் இயக்கம் தாமதம்
ADDED : நவ 13, 2024 09:41 PM
சென்னை:தெலுங்கானாவில் சரக்கு ரயில் தடம் புரண்டதால், 20க்கும் மேற்பட்ட ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டன. இதனால், ரயில் சேவை பாதிக்கப்பட்டதால், பயணியர் அவதிப்பட்டனர்.
தெலுங்கானா மாநிலம், ராகவபுரம் -- ராமகுண்டம் இடையே, இரும்புத் தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில், நேற்று முன்தினம் இரவில், தடம்புரண்டு விபத்து ஏற்பட்டது.
இந்த ரயிலில் மொத்தமுள்ள 44 பெட்டிகளில், 11 பெட்டிகள் தடம்புரண்டன. இதில், யாருக்கும் காயம் ஏற்படவில்லை. விபத்து ஏற்பட்ட இடத்தில், ரயில் தண்டவாளம் சீரமைப்பு பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.
இதனால், தமிழகம், கேரளா, கர்நாடகாவில் இருந்து புதுடில்லி, ஆமதாபாத் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் விரைவு ரயில்கள், நேற்று மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டன.
குறிப்பாக, சென்னை சென்ட்ரல் - புதுடில்லி ஜி.டி., விரைவு ரயில், ஜெய்ப்பூர் - கோவை, சென்னை சென்ட்ரல் - ஆமதாபாத் நவஜீவன் உட்பட 20க்கும் மேற்பட்ட விரைவு ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டன. பல மணி நேரம் தாமதமாக இயக்கப்பட்டதால், பயணியர் அவதிப்பட்டனர்.

