/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மருத்துவர் எனக்கூறி ஓட்டுனரிடம் நுாதன முறையில் மொபைல், பணம் பறிப்பு
/
மருத்துவர் எனக்கூறி ஓட்டுனரிடம் நுாதன முறையில் மொபைல், பணம் பறிப்பு
மருத்துவர் எனக்கூறி ஓட்டுனரிடம் நுாதன முறையில் மொபைல், பணம் பறிப்பு
மருத்துவர் எனக்கூறி ஓட்டுனரிடம் நுாதன முறையில் மொபைல், பணம் பறிப்பு
ADDED : அக் 11, 2024 12:15 AM
வடபழனி, செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம், இந்திரா நகரைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ், 34; கால் டாக்சி ஓட்டுனர். சென்னையில் கார் ஓட்டுகிறார்.
விருகம்பாக்கத்தைச் சேர்ந்த சஞ்சய்வர்மா, 45, என்பவர், மாமல்லபுரம் செல்ல, கோவிந்தராஜ் காரில், வடபழனி விஜயா மருத்துவமனையில் கடந்த 9ம் தேதி ஏறினார்.
கார் புறப்பட்ட சிறிது நேரத்தில், தான் மருத்துவர் என கூறியுள்ளார். பின், வடபழனி மவுரியா இன்டர்நேஷனல் ஹோட்டலுக்கு, உணவருந்த சென்றனர்.
இருவரும் உணவருந்தும் வேளையில், 'என் கையில் பணமாக இருக்கிறது. அவசர தேவையாக என்னுடைய 'ஜிபே' எண்ணிற்கு 7,000 ரூபாய் அனுப்ப முடியாமா' என சஞ்சய்வர்மாகேட்டுள்ளார்.
இதையடுத்து கோவிந்தராஜ், சம்பந்தப்பட்ட எண்ணிற்கு பணத்தை அனுப்பியதும், கையில் இருந்த 7,000 ரூபாயை சஞ்சய்வர்மா கொடுத்து உள்ளார். பின், 'என் மொபைல் 'சுவிட்ச் ஆப்' ஆகிவிட்டது.
அவசரமாக ஒரு போன் செய்ய வேண்டும்' எனக்கூறி, கோவிந்தராஜ் மொபைல் போனை வாங்கியுள்ளார். அந்த போனில் பேசியபடி, சஞ்சய்வர்மா அங்கிருந்து தப்பியுள்ளார்.
சாப்பிட்ட பணத்திற்கு 'பில்' தொகை கட்ட வேண்டியிருந்ததால், சஞ்சய்வர்மா கொடுத்த நோட்டுகளை, கோவிந்தராஜ் பயன்படுத்தி உள்ளார்.
அப்போது, அந்த நோட்டுகள், சினிமாவில் பயன்படுத்தப்படும் போலி ரூபாய் நோட்டுகள் என்பது தெரியவந்தது. இதையடுத்து கோவிந்தராஜ், மொபைல் போன், பணத்தை ஏமாற்றிய சஞ்சய்வர்மா மீது, வடபழனி போலீசில் புகார் அளித்தார்.
போலீஸ் விசாரணையில், இந்த மோசடியில் ஈடுபட்ட சஞ்சய்வர்மா, இதேபோல் நுாதன திருட்டில் 2023ல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதும், சமீபத்தில் வெளியே வந்த நிலையில் அதே கைவரிசையை மீண்டும் நடத்தியதும் தெரிந்தது.
தலைமறைவாக உள்ள சஞ்சய்வர்மாவை, போலீசார் தேடுகின்றனர்.