ADDED : அக் 30, 2025 12:24 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆவடி மாநகராட்சியில் உள்ள 48 வார்டுகளில் வார்டு சிறப்பு கூட்டம் நேற்று நடந்தது. ஆனால், வார்டு சிறப்பு கூட்டம் குறித்து பொதுமக்களிடம் முறையாக தெரிவிக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கவுன்சிலர்கள், அவர்களுக்கு தெரிந்தவர்களிடம் மட்டும் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதனால் ஒவ்வொரு வார்டிலும் குறைந்தபட்சம் 20 பேர் முதல் அதிகபட்சமாக 100 வரை மட்டுமே பங்கேற்றனர்.
சில இடங்களில் அரசியல் கட்சியினர் இருந்ததாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டினர். இந்த கூட்டம் வழக்கம்போல, வெறும் கண்துடைப்பு தான் என, பொதுமக்கள் தெரிவித்தனர்.

