/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
செய்திகள் சில வரிகளில்... வடசென்னை
/
செய்திகள் சில வரிகளில்... வடசென்னை
ADDED : அக் 30, 2025 12:24 AM
மொபைல் போன்
கடையில் திருட்டு
பட்டாபிராம்: மசூதி தெருவில் மொபைல் போன் கடை நடத்தி வருபவர் சாகுல் ஹமீது, 45. நேற்று காலை இவரது கடையின் ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. மொபைல் போன், இயர் பட்ஸ், ப்ளூடூத் ஸ்பீக்கர், ஸ்மார்ட் வாட்ச் என, 30,000 ரூபாய் மதிப்பிலான பொருட்கள் திருடு போயிருந்தன. பட்டாபிராம் போலீசார் விசாரிக்கின்றனர்.
மளிகை கடைகளில்
பணம் திருட்டு
பட்டாபிராம்: பி.டி.எம்.எஸ்., சாலையில் மளிகை கடை நடத்தி வருபவர் குருசாமி, 45. பட்டாபிராம், கோபாலபுரம் பிரதான சாலையில் கடை நடத்தி வருபவர் சண்முகம், 52. இரு கடைகளில் இருந்தும் முறையே 8,000 மற்றும் 15,000 ரூபாய் நேற்று முன்தினம் இரவு திருட்டு போனது. இது குறித்து பட்டாபிராம் போலீசார் விசாரிக்கின்றனர்.
மழை பாதிப்பு
நிவாரணம்
திருநின்றவூர்: நத்தமேடு ஊராட்சியில், 429 ஏக்கர் பரப்பில் நத்தமேடு ஏரி அமைந்துள்ளது. தற்போது ஏரி நிரம்பி, 1,000க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. பாதிக்கப்பட்ட, 35க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த, 150க்கும் மேற்பட்டோரை, மாவட்ட நிர்வாகத்தினர் மீட்டு, திருநின்றவூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். அவர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.
குழாய் பதிப்பு
அ.தி.மு.க.,
தி.மு.க., குஸ்தி
பெரம்பூர்: பெரம்பூர், எஸ்.எஸ்.வி., கோவில் 2வது தெருவில், குடிநீர் வாரியம் சார்பில் புதிதாக குடிநீர் குழாய் பதிக்கும் பணி நடக்கிறது. அப்போது அ.தி.மு.க., 70வது வார்டு நிர்வாகி லில்லி கல்பனா அவரது ஆதரவாளர்களுடன் வந்து, 'சிறிய குழாய்களை பதிக்காமல், ஐந்தடி வி ட்டமுள்ள குழாய்களை பதிக்க வேண்டும்' எனக்கூறி பணிகளை நிறுத்தினார். இதையறிந்து அங்கு வந்த தி.மு.க., நிர்வாகிகளும் இடையே தகராறு ஏற்பட்டது. தகவலறிந்து வந்த செம்பியம் போலீசார் பேச்சு நடத்திய பின், பணிகள் தொடர்ந்தன.
பெண்ணிற்கு
மிரட்டல்
வாலிபர் கைது
புழல்: கணவரை பிரிந்து குழந்தையுடன் புழல் பகுதியில் வசிக்கும் 30 வயது பெண்ணுக்கும், திருவள்ளூர் மாவட்டம், கோளப்பன்சேரியைச் சேர்ந்த முரளி, 26, வாலிபருக்கும், பழக்கம் ஏற்பட்டு, கணவன் மனைவி போல வாழ்ந்து வந்தனர்.
இந்நிலையில் அப்பெண் கருவுற்றார். ஆனால் முரளி திருமணத்திற்கு மறுத்தார். பாதிக்கப்பட்ட பெண், புழல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். விசாரித்த போலீசார், முரளியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் ஜாமினில் வந்த முரளி, மீண்டும் அப்பெண்ணிற்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து விசாரித்த போலீசார், மீண்டும் முரளியை கைது செய்தனர்.

