/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'தொழிற்சாலைகள் மீது வழக்கு பதிந்திருக்க வேண்டும்' ஓய்வு பெற்ற நீதிபதி ஆவேசம்
/
'தொழிற்சாலைகள் மீது வழக்கு பதிந்திருக்க வேண்டும்' ஓய்வு பெற்ற நீதிபதி ஆவேசம்
'தொழிற்சாலைகள் மீது வழக்கு பதிந்திருக்க வேண்டும்' ஓய்வு பெற்ற நீதிபதி ஆவேசம்
'தொழிற்சாலைகள் மீது வழக்கு பதிந்திருக்க வேண்டும்' ஓய்வு பெற்ற நீதிபதி ஆவேசம்
ADDED : ஜன 02, 2024 12:40 AM
திருவொற்றியூர், “பாதிப்பை ஏற்படுத்திய, தொழிற்சாலைகள் மீது, கிரிமினல் வழக்கு பதிந்திருக்க வேண்டும்,” என, ஓய்வு பெற்ற நீதிபதி கண்ணன் கூறினார்.
சென்னை, எண்ணுார் மக்கள் பாதுகாப்பு குழு சார்பில், ஸ்லோ மோஷன் போபால் ; எண்ணுாரில் கொடிய இயல்பு நிலை குறித்து, மக்கள் கருத்து கேட்பு கூட்டம், நேற்று காலை, தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
இதில், பஞ்சாப், அரியானா உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கண்ணன் தலைமையில், வழக்கறிஞர் நாகசைலா, ஆராய்ச்சியாளர் கல்பனா, ஊட கவியலாளர் முரளிதரன், தொழிலாளர் செயற்பாட்டாளர் வைஷ்ணவி ஆகியோர் அடங்கிய குழு மக்களிடம் கருத்துகளை கேட்டனர்.
பின், ஓய்வு பெற்ற நீதிபதி கண்ணன் அளித்த பேட்டி :
கருத்து கேட்பு கூட்டம் மக்களிடையே இருக்கும் கொதிப்பை வெளிப்படுத்தும் விதமாக இருந்தது. இது உயிருக்கு ஆபத்தான நிகழ்வு. நள்ளிரவு, அமோனியா கசிவால், பிள்ளைகளுடன் உயிரை காப்பாற்றிக் கொள்ள பயந்து மக்கள் வெளியேறியுள்ளனர்.
இந்த மக்களின் கோரிக்கை, தங்கள் பாதிப்புகளை கேட்க வேண்டும் என்பது தான். அதிகாரத்தில் இருப்பவர்கள் அதை கூட கேட்காத அவலம் உள்ளது. வாயு கசிவு பிரச்னை தொடர்ச்சியாக உள்ளது. ஆய்வு செய்து முடிவு கட்ட வேண்டும்.
மக்கள் அவர்களுக்காக இன்றி, எதிர்கால சந்ததியினருக்காகவும் தான் பேசி வருகின்றனர். வாழ்வாதாரம் பாதிக்கும் மீனவர்களுக்கு, 8,000, 10,000 ரூபாய் நிவாரணம் வழங்கினால், எப்படி தீர்வாகும்.
அமோனியா கசிவால், கேன்சர், கருத்தரித்தல் தடை பிரச்னை உள்ளது. அரசியல்வாதிகள் மட்டும் வந்தால் போதாது. குறைகளை கேட்க யாரும் வரவில்லை என்ற ஆதங்கம் அவர்களுக்கு உள்ளது.
உடல் நல பாதிப்புள் குறித்த தரவுகள் சேகரிக்கப்பட வேண்டும். அது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும். 18 பேர் மீது வழக்கு போடப் பட்டுள்ளது நியாயமற்றது. சாகும் நிலையில் போராடிய மக்கள் மீதான வழக்கு பதிவு தவறானது.
வழக்குகளை வாபஸ் பெற வேண்டும். பாதிப்பை ஏற்படுத்திய தொழிற்சாலைகள் மீது, கிரிமினல் வழக்கு பதிந்திருக்க வேண்டும். அமோனியா கசிவால், சுற்றுசூழல், உயிரினங்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
எண்ணெய் கசிவே இல்லை என்பது பித்தலாட்டம். நிவாரணம் என்பது குறைந்தபட்ட விஷயம். மக்கள் உங்களிடம் பிச்சை கேட்கவில்லை. நாசக்கார தொழிற்சாலைகளை மூட வேண்டும்.
மக்களின் உணர்வுகளுக்கு, சரியான வழிகாட்டுதல்கள் வழங்கப்படும்.
இவ்வாறு, அவர் கூறினார்.

