/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
போலி 'ஜிமிக்கி' அடகு வைத்த 'தில்லாலங்கடி' நபருக்கு வலை
/
போலி 'ஜிமிக்கி' அடகு வைத்த 'தில்லாலங்கடி' நபருக்கு வலை
போலி 'ஜிமிக்கி' அடகு வைத்த 'தில்லாலங்கடி' நபருக்கு வலை
போலி 'ஜிமிக்கி' அடகு வைத்த 'தில்லாலங்கடி' நபருக்கு வலை
ADDED : ஜன 01, 2026 04:36 AM
புளியந்தோப்பு: போலி நகையை அடகு வைத்து, 82,000 ரூபாய் மோசடி செய்த தில்லாலங்கடி நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
சூளை, சுப்பிரமணி தெரு பகுதியைச் சேர்ந்தவர் சாந்திலால், 58. அடகு கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு, நேற்று முன்தினம், 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் 12 கிராம் மதிப்பில் கம்மல், ஜிமிக்கியை அடகு வைத்து சாந்திலாலிடம், 82,000 ரூபாயை பெற்றுச் சென்றார்.
பின் நகையை பரிசோதித்தபோது, அது போலி நகை என்பது தெரிய வந்தது. அதுமட்டுமல்லாமல் அவர் கொடுத்த முகவரியும் போலி என்பது தெரிய வந்தது.
போலி நகையை அடகு வைத்து ஏமாற்றிய தில்லாலங்கடி நபரை, புளியந்தோப்பு போலீசார் தேடி வருகின்றனர்.