/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
போலி நகைகளை அடகு வைத்து மோசடி: மற்றொரு வாலிபர் கைது
/
போலி நகைகளை அடகு வைத்து மோசடி: மற்றொரு வாலிபர் கைது
போலி நகைகளை அடகு வைத்து மோசடி: மற்றொரு வாலிபர் கைது
போலி நகைகளை அடகு வைத்து மோசடி: மற்றொரு வாலிபர் கைது
ADDED : அக் 30, 2024 06:46 PM
சென்னை:போலி நகைகளை அடகு வைத்து, 2.60 லட்சம் ரூபாய் மோசடி செய்து தலைமறைவான குற்றவாளியை போலீசார் நேற்று கைது செய்தனர்.
மயிலாப்பூர், நாட்டு சுப்புராயன் தெருவை சேர்ந்தவர் சீத்தாராம், 32. திருவல்லிக்கேணி லாயிட்ஸ் சாலையில், அடகு கடை நடத்தி வருகிறார். கடந்த ஜூலை, 7ல், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பின்டு, 43, சோனல், 38, கிருஷ்ணாபால் சிங் நாயக், 23 ஆகிய மூவரும், 60 கிராம் எடையிலான நகையை, ஒரு மாதத்தில் மீட்டுக் கொள்வதாக அடகு வைத்து, 2.60 லட்சம் ரூபாய் பெற்று சென்றனர்.
ஒரு மாதத்திற்கு பிறகும் நகையை மீட்க வராததால், சந்தேகமடைந்த கடையின் உரிமையாளர், நகைகளை சோதனை செய்தபோது, அவை போலியானவை என்பது தெரியவந்தது.
இதுகுறித்து, ராயப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, மோடியில் ஈடுபட்ட பின்டு, சோனல் ஆகிய இருவரை கைது செய்தனர். கிருஷ்ணாபால் சிங் நாயக் ராஜஸ்தானுக்கு தப்பினார். போலீசார் ராஜஸ்தான் சென்று, அவரை கைது செய்தனர். நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.