/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பிரபல நிறுவனத்தின் பெயரில் போலி பெயின்ட்: 3 பேர் கைது
/
பிரபல நிறுவனத்தின் பெயரில் போலி பெயின்ட்: 3 பேர் கைது
பிரபல நிறுவனத்தின் பெயரில் போலி பெயின்ட்: 3 பேர் கைது
பிரபல நிறுவனத்தின் பெயரில் போலி பெயின்ட்: 3 பேர் கைது
ADDED : ஜூலை 05, 2025 12:13 AM
சென்னை, :பிரபல 'ஏசியன் பெயின்ட்' நிறுவனத்தின் பெயரில், போலி பெயின்ட் தயாரித்து விற்ற மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
சந்தையில் உள்ள முன்னணி நிறுவனங்களின் பெயரில், போலி பொருட்கள் தயாரித்து விற்பனை செய்வோர் பற்றி கண்காணிக்கும், எஸ்.ஜி.எஸ்., என்ற தனியார் நிறுவனம் டில்லியில் செயல்படுகிறது.
இந்நிறுவனத்தின் உதவி மேலாளர் தம்புசாமி, சென்னை சி.பி.ஐ.டி., அலுவலகத்தில் செயல்படும், அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப்பிரிவு அலுவலகத்தில், போலி பொருட்கள் குறித்து புகார் அளித்துள்ளார்.
இப்பிரிவு போலீசார் ரகசிய கண்காணிப்பு நடத்தி, சென்னை அய்யப்பன்தாங்கல் பகுதியில், 'ஏசியன் பெயின்ட்' நிறுவனத்தின் பெயரில் போலியாக தயாரித்து விற்ற அதே பகுதியைச் சேர்ந்த பால்பாண்டி, 49, ஆரோக்கியசாமி, 53, சரவணன், 44, ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து, 1.73 லட்சம் ரூபாய் மதிப்பிலான போலி ஏசியன் பெயின்ட் பறிமுதல் செய்யப்பட்டது.
அதேபோல, எச்.சி.எச்., மற்றும் என்.பி.சி., என்ற நிறுவனங்களின் 'பேரிங்கு'களை போலியாக தயாரித்து, மதுரையில் விற்பனை செய்த, மேற்கு வங்க மாநிலத்தைச்சேர்ந்த ரமேஷ்குப்தா, 58, அங்கித் குப்தா, 28, ஆகியோரையும் போலீசார் நேற்று கைது செய்துள்ளனர்.
இவர்களிடம் இருந்து, 58,143 ரூபாய் மதிப்பிலான போலி பேரிங்குகளை பறிமுதல் செய்தனர்.