/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வீட்டில் பூஜை செய்வதாக நடித்து நகை திருடிய போலி சாமியார் கைது
/
வீட்டில் பூஜை செய்வதாக நடித்து நகை திருடிய போலி சாமியார் கைது
வீட்டில் பூஜை செய்வதாக நடித்து நகை திருடிய போலி சாமியார் கைது
வீட்டில் பூஜை செய்வதாக நடித்து நகை திருடிய போலி சாமியார் கைது
ADDED : மார் 26, 2025 11:57 PM

வடபழனி, வடபழனி சைதாப்பேட்டை சாலையை சேர்ந்தவர் சசிகலா, 50. இவரது கணவர் கணேசன் உடல் நலக்குறைவால், வீட்டில் படுத்த படுக்கையாக உள்ளார்.
இந்நிலையில், கடந்த 19ம் தேதி சசிகலா வீட்டிற்கு, சாமியார் என்ற போர்வையில் ஒருவர் வந்தார்.
'கணேசன் உடல் நிலை சரியாக பூஜை செய்ய வேண்டும். இல்லையென்றால் அவர் இறந்து விடுவார்' என, பயமுறுத்தி உள்ளார்.
பயந்து போன சசிகலா, பூஜைக்கு ஏற்பாடு செய்தார். அத்துடன், போலி சாமியார் கூறியபடி, 3.5 சவரன் நகைகளை வைத்து பூஜை செய்தார்.
பூஜை முடிந்த பின், பூஜை பொருட்களை பூஜை அறை மற்றும் கணவர் படுக்கை அருகே வைத்தார்.
திரும்பி வந்து பார்த்தபோது, பூஜைக்கு வைத்திருந்த, 3.5 சவரன் நகைகளுடன், போலி சாமியார் தப்பியது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரில், வடபழனி போலீசார் வழக்கு பதிந்து, நகையை திருடி சென்றது, திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை சேர்ந்த மணிகண்டன், 25 என தெரியவந்தது.
அவரை, போலீசார் நேற்று கைது செய்தனர். அவரிடம் இருந்து, 3.5 சவரன் நகையை பறிமுல் செய்தனர்.
***