/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மூக்குப்பொடி நிறுவனத்தின் பெயரில் போலி தயாரிப்பு: மூவருக்கு வலை
/
மூக்குப்பொடி நிறுவனத்தின் பெயரில் போலி தயாரிப்பு: மூவருக்கு வலை
மூக்குப்பொடி நிறுவனத்தின் பெயரில் போலி தயாரிப்பு: மூவருக்கு வலை
மூக்குப்பொடி நிறுவனத்தின் பெயரில் போலி தயாரிப்பு: மூவருக்கு வலை
ADDED : நவ 05, 2025 02:58 AM
கொடுங்கையூர்: கொடுங்கையூர், எழில் நகர் பி - பிளாக்கைச் சேர்ந்தவர் சிமியோன், 32; 'தனவிலாஸ் மெட்ராஸ் ஸ்னாப்' நிறுவன மேலாளராக 10 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார்.
இவர், அயனாவரத்தில் உள்ள அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப் பிரிவில் அளித்த புகார்:
எங்கள் நிறுவனத்தில், தண்டையார்பேட்டையை தலைமையிடமாக வைத்து, டி.எஸ்.பட்டணம் பொடி என்ற பெயரில் மூக்குப்பொடி தயாரித்து, வெளி மாவட்டங்கள், மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு, முகவர்கள் மூலம் விற்பனை செய்து வருகிறோம்.
இந்நிலையில், சில மாதங்களாக பட்டணம் பொடி, தரமின்றி இருப்பதாக புகார்கள் வந்தன. இது குறித்து விசாரணை நடத்தியபோது, கொடுங்கையூர், கே.கே.டி.நகரில் அதே பகுதி யைச் சேர்ந்த சீனிராஜ், மணிகண்டன், ஏமராஜ் ஆகியோர், டி.எஸ்.பட்டணம் பொடி என்ற பெயரில், போலியாக மூக்குப்பொடி தயாரித்து விற்றது தெரியவந்தது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
போலீசாரின் விசாரணையில், மூவரும் டி.எஸ்.பட்டணம் பொடி என்ற பெயரில் போலியாக மூக்குப்பொடி தயாரித்து விற்றது தெரியவந்தது. அங்கிருந்த போலி மூக்குப்பொடி தயாரிப்புகள், சீல், போலி பவுச் லேபிள்களை பறிமுதல் செய்தனர். முறைகேடில் ஈடுபட்ட தலைமறைவான சீனிராஜ் உட்பட மூவரை தேடி வருகின்றனர்.

