/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
புற்றீசலாக முளைக்கும் தெருவோர கடைகள் திருவொற்றியூரில் போக்குவரத்து பாதிப்பு
/
புற்றீசலாக முளைக்கும் தெருவோர கடைகள் திருவொற்றியூரில் போக்குவரத்து பாதிப்பு
புற்றீசலாக முளைக்கும் தெருவோர கடைகள் திருவொற்றியூரில் போக்குவரத்து பாதிப்பு
புற்றீசலாக முளைக்கும் தெருவோர கடைகள் திருவொற்றியூரில் போக்குவரத்து பாதிப்பு
ADDED : நவ 05, 2025 02:59 AM
திருவொற்றியூர்: புற்றீசல்போல முளைக்கும் தெருவோர கடைகளால், நடைபாதை ஆக்கிரமிப்பு மற்றும் போக்குவரத்து பாதிப்பால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
திருவொற்றியூர் மண்டலத்தில், காலடிப்பேட்டை, தேரடி, திருவொற்றியூர் மார்க்கெட், விம்கோ நகர், எர்ணாவூர் மார்க்கெட், கத்திவாக்கம் மார்க்கெட் உள்ளிட்ட பிரதான காய்கறி, பழங்கள் மற்றும் மீன் சந்தைகள் உள்ளன.
தவிர, மாநகராட்சியின் வருவாய் துறை சார்பில், அங்கீகரிக்கப்பட்ட பண்டக சாலை தெருக்களும் உள்ளன. ஆனால், சில தெருவோர வியாபாரிகள் இதையெல்லாம் பொருட்படுத்தாமல், ஆங்காங்கே நடைபாதைகளில் கடை போட்டு வியாபாரம் செய்கின்றனர்.
குறிப்பாக, திருவொற்றியூர் நெடுஞ்சாலையின், பாரத் நகர், ஐ.டி.சி., அஜாக்ஸ், எல்லையம்மன் கோவில், காலடிப்பேட்டை உள்ளிட்ட இட ங்களில், சாலையோரம் நடைபாதைகளை ஆக்கிரமித்து, காய்கறி, பழம் விற்பனை செய்யும் தற்காலிக கடைகளும் அதிகம் முளைத்துள்ளன.
இதன் காரணமாக, நடைபாதையை பாதசாரிகள் பயன்படுத்த முடியாத சூழல் உள்ளது. இதை போலீசாரும் கண்டுக்கொள்வதில்லை. மாறாக, மாமூல் வாங்கிக் கொண்டு இந்த கடைகளை செயல்பட அனுமதிக்கின்றனர்.
இரவு நேரங்களில், தின்பண்டங்கள் விற்பனை செய்யும் கடைகளாலும், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றன.
மாநகராட்சி உதவி வருவாய் துறை அதிகாரிகள் கவனித்து, அனுமதியின்றி சாலையோரம் முளைத்திருக்கும் கடைகளை அகற்ற வேண்டும்.
வியாபாரம் செய்ய விரும்புவோரை வரன்முறைக்குள் கொண்டு வந்து, ஒதுக்கப்பட்டுள்ள அங்கீகரிக்கப்பட்ட பண்டக சாலை வீதிக்குள் கடைகளை அமைத்துக் கொள்ள ஏற்பாடு செய்ய வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

