/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கால் மூட்டு கொழுப்பு அகற்ற 'ஸ்ட்ரா வைத்தியம்' ராஜஸ்தான் போலி சித்த மருத்துவர்கள் சிக்கினர்
/
கால் மூட்டு கொழுப்பு அகற்ற 'ஸ்ட்ரா வைத்தியம்' ராஜஸ்தான் போலி சித்த மருத்துவர்கள் சிக்கினர்
கால் மூட்டு கொழுப்பு அகற்ற 'ஸ்ட்ரா வைத்தியம்' ராஜஸ்தான் போலி சித்த மருத்துவர்கள் சிக்கினர்
கால் மூட்டு கொழுப்பு அகற்ற 'ஸ்ட்ரா வைத்தியம்' ராஜஸ்தான் போலி சித்த மருத்துவர்கள் சிக்கினர்
UPDATED : ஆக 23, 2025 06:59 AM
ADDED : ஆக 23, 2025 12:39 AM

கீழ்ப்பாக்கம்: கால் மூட்டு வலிக்கு, 'ஸ்ட்ரா' எனும் உறிஞ்சு குழாய் சிகிச்சை அளிப்பதுபோல நாடகமாடிய, போலி சித்த மருத்துவர்கள் இருவர் வசமாக சிக்கினர்.
அயனாவரத்தைச் சேர்ந்தவர் ஆசிஷ், 35. இவர், ராயப்பேட்டையில் எலக்ட்ரானிக்ஸ் பொருள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார்.
இவரது தந்தை மோதிலால் சோனிக்கு, மூட்டு வலி உள்ளதால் அதற்கான சிகிச்சை எடுத்து வந்தார்.
கடந்த 8ம் தேதி ஆசிஷும், அவரது தந்தையும், ராயப்பேட்டையில் உள்ள ஜெயின் கோவிலில் சுவாமி கும்பிட்டு வெளியே வந்தனர். அங்கு அவர்களுக்கு விகாஸ் என்பவர் அறிமுகமாகி உள்ளார்.
அவர், மூட்டு வலிக்கு தனக்கு தெரிந்த சிறந்த சித்த மருத்துவர்கள் இருப்பதாக கூறி, இருவரின் மொபைல்போன் எண்ணை கொடுத்து சென்றுள்ளார்.
கடந்த 10ம் தேதி, விகாஸ் அந்த மொபைல் போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசியுள்ளார். மொபைலில் பேசிய சித்த மருத்துவர்கள் இருவர், ஆசிஷ் வீட்டிற்கு சென்றனர்.
ஆசிஷ் தந்தையின் காலை பரிசோதித்து, காலில் தேவையற்ற கொழுப்பு இருப்பதாக கூறி அதை எடுக்க வேண்டும். ஒரு முறை எடுக்க 5,000 ரூபாயாகும் என தெரிவித்துள்ளனர்.
ஆசிஷும் சரி எனக்கூற, அவரது தந்தையின் காலில் லேசாக கீறி, ஸ்ட்ரா வைத்து உறிஞ்சுவது போல் செய்து, கொழுப்பை வெளியே துப்பியுள்ளனர். 32 தடவை கொழுப்பை உறிஞ்சி எடுத்துள்ளோம் எனக்கூறி, 1.60 லட்ச ரூபாய் கேட்டுள்ளனர். பேரம் பேசி, 75,000 ரூபாய் மட்டும் ஆசிஷ் கொடுத்துள்ளார்.
சித்த மருத்துவர்கள் கிளம்பியவுடன், தன் நண்பரான பிரவீனுக்கு மருத்துவர்களின் வைத்தியம் பற்றி தெரிவித்துள்ளார்.
இது 'டுபாக்கூர்' என தெரிவித்த பிரவீன், அவர்களை பிடிக்க திட்டம் தீட்டினார்.
மூட்டு வலிக்கு வைத்தியம் பார்க்க வேண்டும் எனக் கூறி, கீழ்பாக்கத்தில் உள்ள தன் வீட்டிற்கு இருவரையும் வரவழைத்த பிரவீன், அவர்களை பிடித்து தலைமை செயலக காலனி போலீசாரிடம் ஒப்படைத்தார்.
போலீசாரின் விசாரணையில், பிடிபட்டோர் ராஜஸ்தானைச் சேர்ந்த முகமது இம்ரான் சிங் வாலா, 36 மற்றும் முகமது இஸ்லாம், 42.
இவர்கள், வடமாநில நபர்களை மட்டுமே குறி வைத்து, வைத்தியம் செய்வதாக கூறி ஏமாற்றுவதை வழக்கமாக வைத்துள்ளதும் தெரிய வந்தது,
போலி சித்த மருத்துவர்கள் இருவரையும் நேற்று மாலை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.