/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
குடும்ப கணக்கெடுப்பு ஆலோசனை கூட்டம்
/
குடும்ப கணக்கெடுப்பு ஆலோசனை கூட்டம்
ADDED : ஏப் 15, 2025 11:55 PM
தாம்பரம்,
தாம்பரம் மாநகராட்சி, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை, யுனிசெப் நிறுவனத்துடன் இணைந்து, குடும்ப கணக்கெடுப்பு பணி நடந்து வருகிறது.
அதன்படி, மாநகராட்சிக்கு உட்பட்ட ஐந்து மண்டலங்களில், மருத்துவக் காப்பீடு, கல்வி, தொழில், சுகாதார மதிப்பீடு, குழந்தைகளின் தடுப்பூசி, நோய் பாதிப்பு, சமூக பொருளாதார மதிப்பீடு, குடிநீர் வினியோகம், கழிவுநீரகற்றுதல், செல்லப் பிராணிகள் உள்ளிட்ட விபரங்கள் சேகரிக்கப்படுகின்றன.
மேலும், ஆயூஷ்மான் பாரத் நல அடையாள எண் உருவாக்கி தரப்படுகிறது. இதன் வாயிலாக மக்கள் தொகைக்கு ஏற்ப சேவைப் பகுதிகளை வறையறை செய்து, பொது சுகாதார சேவைகளை திட்டமிட வழிவகை செய்யப்படுகிறது.
இந்நிலையில், இது தொடர்பான ஆய்வு கூட்டம், மாநகராட்சி அலுவலகத்தில், கமிஷனர் பாலச்சந்தர் தலைமையில் நேற்று நடந்தது.
இதில், நகர்நல அலுவலர், யுனிசெப் நிறுவனத்தின் அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள் பங்கேற்று, பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.

