/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சாலையில் கார் தீக்கிரை உயிர் தப்பிய தந்தை, மகள்
/
சாலையில் கார் தீக்கிரை உயிர் தப்பிய தந்தை, மகள்
ADDED : அக் 28, 2025 01:12 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அடையாறு: தெலுங்கானாவை சேர்ந்தவர் வெங்கடேஸ்வரராவ், 52. இவரது மகள், சென்னையில் உள்ள தனியார் கல்லுாரியில் எம்.பி.பி.எஸ்., படிக்கிறார். நேற்று, மகளை பார்க்க, 'வோக்ஸ் வேகன்' என்ற காரில் சென்னை வந்தார். இரவு, இருவரும் பெசன்ட்நகர் கடற்கரைக்கு சென்றுவிட்டு, கிண்டி நோக்கி காரில் புறப்பட்டனர்.
அடையாறு, ஆவின் அருகில் செல்லும்போது, காரின் முன்பகுதியில் இருந்து புகை வந்தது. உடனே, இருவரும் காரில் இருந்து கீழே இறங்கினர். அடுத்த சில நிமிடத்தில், கார் கொழுந்துவிட்டு எரிந்தது. திருவான்மியூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் தீயை அணைத்தனர். சாஸ்திரிநகர் போலீசார் விசாரிக்கின்றனர்.

