/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கோவிலுக்குள் புகுந்து திருட்டு தந்தை - மகன் கைது
/
கோவிலுக்குள் புகுந்து திருட்டு தந்தை - மகன் கைது
ADDED : ஜூலை 24, 2025 12:00 AM

திருவொற்றியூர் :கோவில் பூட்டை உடைத்து, தாலி மற்றும் உண்டியல் காணிக்கை பணம் திருடிய தந்தை, மகனை போலீசார் கைது செய்தனர்.
திருவொற்றியூர், நேரு நகர், ஒத்தவாடை தெருவில், பவானி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின் பூசாரி நாகம்மா, 63, கடந்த 21ம் தேதி காலை வந்த போது, கோவில் பூட்டு உடைக்கப்பட்டு, உள்ளே அம்மன் அணிந்திருந்த 4 கிராம் தங்கத்தாலி திருடு போயிருந்து.
இது குறித்து, சாத்தாங்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து 'சிசிடிவி' காட்சிப் பதிவுகளை கைப்பற்றி, மர்ம நபர்களை தேடி வந்தனர்.
இந்நிலையில், திருட்டில் தொடர்புடைய, திருவொற்றியூர், அறிஞர் அண்ணா காலனியைச் சேர்ந்த உமாபதி, 54, அவருடைய மகன் காசி விஸ்வநாதன், 31, ஆகிய இருவரையும், போலீசார் நேற்று கைது செய்தனர்.
அவர்களிடம் விசாரித்த போது, தச்சர் வேலை செய்யும் உமாபதி, மது குடிப்பதற்காக, மகனுடன் சேர்ந்து கோவிலில் கைவரிசை காட்டியது தெரியவந்தது.
மேலும், அதே பகுதியில், மற்றொரு கோவில் உண்டியலை உடைத்து, காணிக்கை பணத்தை திருடியதையும் ஒப்புக் கொண்டனர். விசாரணைக்கு பின், இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், நேற்று சிறையில் அடைத்தனர்.