/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
3 கிலோ கஞ்சாவுடன் தந்தை, மகன் கைது
/
3 கிலோ கஞ்சாவுடன் தந்தை, மகன் கைது
ADDED : ஆக 18, 2025 02:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவான்மியூர்:பேருந்து நிலையம் அருகே, கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த, தந்தை மற்றும் மகனை, போலீசார் கைது செய்தனர்.
திருவான்மியூர் பேருந்து நிலையம் அருகே, சில்லறை வியாபாரிகளை வரவழைத்து, கஞ்சா கைமாற்றப்படுவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
நேற்று, சம்பவ இடத்தில் போலீசார் சோதனை செய்தபோது, இரண்டு பேர், தோள் பையில் கஞ்சா பதுக்கி வைத்து பரிமாறி கொண்டிருந்தனர். திருவான்மியூர் போலீசார், அவர்கள் இருவரையும் பிடித்து விசாரித்தனர்.
அதில், இ.சி.ஆர்., வெட்டுவாங்கேணியை சேர்ந்த பிரகாஷ், 58, அவரது மகன் பிரபு, 30, என தெரிந்தது. இரண்டு பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து, 3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.