/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மகள் செயினை தொலைத்த தந்தை ஆட்டோ ஓட்டுநர் மீட்டு ஒப்படைப்பு
/
மகள் செயினை தொலைத்த தந்தை ஆட்டோ ஓட்டுநர் மீட்டு ஒப்படைப்பு
மகள் செயினை தொலைத்த தந்தை ஆட்டோ ஓட்டுநர் மீட்டு ஒப்படைப்பு
மகள் செயினை தொலைத்த தந்தை ஆட்டோ ஓட்டுநர் மீட்டு ஒப்படைப்பு
UPDATED : ஏப் 04, 2025 02:17 AM
ADDED : ஏப் 04, 2025 12:21 AM

தாம்பரம், மேற்கு தாம்பரம், ரங்கநாதபுரத்தைச் சேர்ந்த, ஆட்டோ ஓட்டுநரான சாகுல், 48, நேற்று காலை சவாரிக்கு சென்றார்.
அப்போது மழை பெய்ததால், சாரலில் பயணியர் நனையாமல் இருக்க, வீட்டில் இருந்த போர்வையை எடுத்துச் சென்றார்.
அதை, தாம்பரம் ஆட்டோ நிறுத்தத்தில் வைத்து, ஆட்டோவில் கட்டிய போது, போர்வையில் இருந்து தங்க செயின் விழுந்துள்ளது.
அப்போது, அவ்வழியே வந்த, ஆட்டோ ஓட்டுநர் கோடீஸ்வரன், 48, அந்த நகையை எடுத்து சாகுலிடம் கொடுத்து உள்ளார்.
அது தன் மகளின் செயின் என்பதை அறியாத சாகுல், தன் நகை அல்ல எனக்கூறி, அதை அவரிடமே திருப்பி கொடுத்துவிட்டார். கோடீஸ்வரனும், அந்நகையுடன் சவாரிக்கு சென்றுவிட்டார்.
இந்நிலையில், சாகுலின் மகள் நஸ்ரின்பானு, 20, தன் 9 சவரன் தாலி செயின் வைத்திருந்த போர்வையை எடுத்துச் சென்றுவிட்டதாக, தந்தை சாகுலிடம் மொபைல் போனில் தெரிவித்துள்ளார்.
அப்போது தான், தவறவிட்டது தன் மகளின் நகை என்பதை உணர்ந்த சாகுல், தாம்பரம் போலீசில் இதுகுறித்து புகார் அளித்தார்.
சாகுலின் நண்பர் ஒருவர், எதேச்சையாக கோடீஸ்வரனின் ஆட்டோ எண்ணை புகைப்படம் எடுத்து வைத்திருந்தார்.
அந்த ஆட்டோ எண்ணை வைத்து, கோடீஸ்வரனின் மொபைல் போன் எண்ணை கண்டுபிடித்து, எஸ்.ஐ., அண்ணாதுரை பேசினார்.
செயின் குறித்து கேட்டபோது, தன்னிடம் அந்நகை இருப்பதாகவும், சவாரியை இறக்கிவிட்டு வந்து தருவதாகவும்கோடீஸ்வரன் கூறி உள்ளார்.
அதன்படி, சிறிது நேரத்தில் காவல் நிலையம் வந்த கோடீஸ்வரன், 9 சவரன் தாலி செயினை போலீசாரிடம் ஒப்படைத்தார். அதை, சாகுல், அவரது மகள் நஸ்ரின்பானுவிடம், போலீசார் கொடுத்தனர்.