/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
குழந்தை தகராறில் வாலிபரை வெட்டிய தந்தை, மகனுக்கு ஐந்து ஆண்டு சிறை
/
குழந்தை தகராறில் வாலிபரை வெட்டிய தந்தை, மகனுக்கு ஐந்து ஆண்டு சிறை
குழந்தை தகராறில் வாலிபரை வெட்டிய தந்தை, மகனுக்கு ஐந்து ஆண்டு சிறை
குழந்தை தகராறில் வாலிபரை வெட்டிய தந்தை, மகனுக்கு ஐந்து ஆண்டு சிறை
ADDED : ஏப் 24, 2025 12:35 AM
சென்னை, ஏப்.24--
வீட்டில் பிரிட்ஜை திறந்து வைத்த குழந்தையை திட்டியதை கேட்ட வாலிபரை வெட்டிய வழக்கில் தந்தை, மகனுக்கு தலா ஐந்து ஆண்டு சிறை தண்டனை விதித்து, மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை கீழ்ப்பாக்கம் சாஸ்திரிநகரைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 33. இவரது வீட்டின் அருகே வசித்து வரும் ராஜ்கமல், 32 என்பவரின் குழந்தை, வெங்கடேசன் வீட்டுக்கு சென்று, அங்கிருந்த பிரிட்ஜை திறந்து வைத்து விட்டு சென்றுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக, 2019 ஜூலை 8ல் ஏற்பட்ட வாய் தகராறு, மோதலாக மாறியது. அப்போது ராஜ்கமல், அவரது தந்தை செல்வராஜ், 55 ஆகியோர் குழந்தையை திட்டியுள்ளனர்.
தொடர்ந்து ராஜ்கமல், வெங்கடேசனை கத்தியால் குத்தியதில், அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
இதுதொடர்பாக கீழ்ப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜ்கமல், செல்வராஜ் இருவரையும் கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை, சென்னை 16வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி எல்.ஆப்ரகாம் லிங்கன் முன் நடந்தது.
போலீசார் தரப்பில், கூடுதல் குற்றவியல் அரசு வழக்கறிஞர் மகாராஜன் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றவாளியான ராஜ்கமல், செல்வராஜ் ஆகியோருக்கு தலா ஐந்து ஆண்டு சிறை தண்டனையும், 50,000 அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.

