/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மேம்பாலம் இறக்கத்தில் மண் குவியலால் அச்சம்
/
மேம்பாலம் இறக்கத்தில் மண் குவியலால் அச்சம்
ADDED : நவ 12, 2024 12:43 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை - -பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை பயன்படுத்தி தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. இந்த சாலையில் பூந்தமல்லி அருகே வேலப்பன்சாவடி, சென்னீர்குப்பம் பகுதியில் உள்ள மேம்பாலத்தின் மீது, அதிக அளவில் மண் குவியல் உள்ளது.
குறிப்பாக மேம்பாலத்தின் இறக்கத்தில் உள்ள மண் குவியல் மீது வாகனங்கள் செல்லும் போது, கட்டுப்பாட்டை இழந்து அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.
எனவே, இந்த மேம்பாலத்தின் மீதுள்ள மண் குவியல்களை அகற்ற வேண்டும்.
- சங்கீதா, 35, பூந்தமல்லி.