ADDED : டிச 05, 2024 12:26 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காசிமேடு, காசிமேடில், கடல் அலைகளின்றி பல அடி துாரத்திற்கு உள்வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
வங்க கடலில் உருவான, பெஞ்சல் புயல் காரணமாக, வடசென்னையின் காசிமேடு, திருவொற்றியூர், எண்ணுார் கடல் பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது.
ஆழ்கடலில், 10 அடி உயரத்திற்கு அலை உருவாகி, பாறைகளில் மோதியதால், மீனவர்கள் படகுகள், வலைகளை பத்திரமாக, தார் சாலையில் எடுத்து கட்டி வைத்தனர்.
புயல் கரையை கடந்த நிலையில், மீனவர்கள் வழக்கம் போல், ஆழ்கடலுக்கு சென்று மீன் பிடித்து வருகின்றனர். நேற்று, காசிமேடு அடுத்த செரியன் நகர் - அண்ணா நகர் வரையிலான கடற்கரை பகுதிகளில், கடல் அலைகளின்றி, பல அடி துாரத்திற்கு கடல் உள்வாங்கியிருந்தது. இதை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.