/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாநகர பேருந்து மோதி பெண் ஊழியர் காயம்
/
மாநகர பேருந்து மோதி பெண் ஊழியர் காயம்
ADDED : ஆக 19, 2025 12:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அடையாறு, அடையாறு பணிமனையில், பேருந்து மோதி, பெண் துாய்மை பணியாளர் பலத்த காயமடைந்தார்.
வேளச்சேரி, ராஜு நகரை சேர்ந்தவர் ரெக்ஸ் மேரி, 50. அடையாறு பணிமனையில் பேருந்து சுத்தம் செய்யும் பணியை செய்து வருகிறார். நேற்று, மணி, 35, என்ற ஓட்டுநர், பழுது பார்த்தபின், ஒரு பேருந்தை ஓரிடத்தில் நிறுத்த ஓட்டிச்சென்றார்.
அப்போது, எதிர்பாராதவிதமாக ரெக்ஸ் மேரி மீது பேருந்து மோதியதில், அவர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரெக்ஸ் மேரி, தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். அடையாறு போலீசார் விசாரிக் கின்றனர்.