/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஷகிலா வளர்ப்பு மகள் மீது பெண் வழக்கறிஞர் புகார்
/
ஷகிலா வளர்ப்பு மகள் மீது பெண் வழக்கறிஞர் புகார்
ADDED : ஜன 22, 2024 01:36 AM
கோடம்பாக்கம்:சென்னை, கோடம்பாக்கம் யுனைடெட் காலனி முதல் குறுக்கு தெருவில் வசிப்பவர் நடிகை ஷகிலா.
தன் அண்ணன் மகளான சீத்தல் என்பவரை, ஆறு மாத குழந்தையாக இருந்த போதிலிருந்து, இவர் தத்தெடுத்து வளர்த்து வந்தார்.
ஷகிலாவின் அண்ணன் இறந்த நிலையில், சீத்தலின் தாய் சசி மற்றும் அவரது அக்கா ஜமீலா ஆகியோர் கோடம்பாக்கம், டிரஸ்ட்புரத்தில் வசித்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் மாலை, ஷகிலா மற்றும் அவரது வளர்ப்பு மகள் சீத்தல் ஆகியோர் இடையே, குடும்ப சண்டை ஏற்பட்டுள்ளது.
அப்போது, சீத்தல் ஷகிலாவை தாக்கி விட்டு, தன் தாய் சசி வீட்டிற்குச் சென்றார். இதுகுறித்து, தன் தோழியான கோடம்பாக்கம், கங்கா நகரைச் சேர்ந்த வழக்கறிஞர் சவுந்தர்யாவிடம், ஷகிலா தெரிவித்து உள்ளார்.
இதையடுத்து, நடிகை ஷகிலா வீட்டிற்குச் சென்ற சவுந்தர்யா, சீத்தலை மொபைல்போனில் தொடர்பு கொண்டு, சமாதானம் பேச அழைத்துள்ளார்.
இதையடுத்து, சீத்தல் அவரது தாய் சசி மற்றும் அக்கா ஜமீலா ஆகியோர் அங்கு சென்று பேசியுள்ளனர்.
அப்போது ஏற்பட்ட தகராறில், சீத்தல் அருகில் இருந்த,'ஆஷ் டிரே'வால், சவுந்தர்யாவின் தலையில் தாக்கியுள்ளார். சீத்தலின் தாய் சசி, சவுந்தர்யாவின் வலது கையில் கடித்துள்ளார்.
பின், ஷகிலாவிற்கு கொலை மிரட்டல் விடுத்து, அசிங்கமாக பேசிவிட்டு சென்றுள்ளனர். இதில் காயமடைந்த வழக்கறிஞர் சவுந்தர்யா, கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த புகார் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.