/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ராஜ்பவனில் மரம் விழுந்து பெண் போலீஸ் காயம்
/
ராஜ்பவனில் மரம் விழுந்து பெண் போலீஸ் காயம்
ADDED : நவ 29, 2024 12:33 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, பரங்கிமலை ஆயுதப்படை பிரிவு காவலர் நந்தினி. நேற்று காலை, கவர்னர் மாளிகை முதலாவது நுைழவாயில் எதிரே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது, நெடுஞ்சாலைத்துறை வளாகத்தில் இருந்த மரம் திடீரென முறிந்து விழுந்ததில், வலது கையில் காயம் ஏற்பட்டது.
காயமடைந்த நந்தினியை, சிறப்பு உதவி ஆய்வாளர் லட்சுமி மீட்டு, சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தார்.
ராஜ்பவன் தீயணைப்பு படையினர், சாலையில் முறிந்து விழுந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர்.