/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
லஞ்சம் வாங்கிய பெண் வி.ஏ.ஓ., ' சஸ்பெண்ட் '
/
லஞ்சம் வாங்கிய பெண் வி.ஏ.ஓ., ' சஸ்பெண்ட் '
ADDED : அக் 26, 2025 01:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநீர்மலை: சென்னை, தில்லை கங்கா நகரைச் சேர்ந்தவர் மேகலாதேவி. பல்லாவரம் சார் - பதிவாளர் அலுவலகத்தில், பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பித்தார்.
இந்த விண்ணப்பம், 'ஆன்லைன்' மூலம், திருநீர்மலை கிராம நிர்வாக அலுவலகத்திற்கு மாற்றப்பட்டது.
பட்டா பெயர் மாற்ற செய்ய, சில நாட்களுக்கு முன், மேகலாதேவியிடம் இருந்து, 12,000 ரூபாயை, திருநீர்மலை கிராம நிர்வாக அலுவலர் சங்கீதா வாங்கிய போது, அவரை, ஆலந்துாரில் உள்ள லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில், லஞ்சம் வாங்கி கைதான வி.ஏ.ஓ., சங்கீதாவை, தாம்பரம் கோட்டாச்சியர் முரளி, 'சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டார்.

