/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வீட்டின் பால்கனி இடிந்து பெண் தொழிலாளி பலி
/
வீட்டின் பால்கனி இடிந்து பெண் தொழிலாளி பலி
ADDED : மார் 19, 2026 07:26 PM

வடபழனி:வீட்டின் பால்கனி இடிந்து விழுந்ததில், பெண் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
வடபழனி அழகிரி நகர், 3வது தெருவை சேர்ந்தவர் கோபி, 57. இவரது மனைவி உமா, 51. இவர்களின், 40 ஆண்டு பழமையான வீட்டில் பால்கனி சேதமானதால், மூன்று நாட்களாக பழுது பார்க்கும் பணி நடந்தது.
இந்த பணியில் ஏழுமலை என்ற மேஸ்திரியுடன், கள்ளக்குறிச்சியை சேர்ந்த மலர்கொடி, 42 என்ற பெண்ணும் ஈடுபட்டு வந்தார். அவர், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தங்கி, சித்தாள் வேலை செய்து வந்தார்.
நேற்று மதியம், முதல்தள பால்கனியில் உமா நடந்து சென்றபோது, திடீரென பால்கனி இடிந்து கீழே விழுந்தது. கீழே வேலை செய்து கொண்டிருந்த மலர்கொடி மீது, கட்டட இடிபாடுகள் விழுந்தன. முதுகில் இரும்பு கம்பி குத்தியதால், மலர்கொடி படுகாயம் அடைந்தார்.
உடனே, அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். டாக்டர்கள் பரிசோதித்ததில், அவர் உயிரிழந்தது தெரியவந்தது.
காயமடைந்த உமா, போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து, வடபழனி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

