sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

தென்மேற்கு மண்டல கராத்தே :கிரசண்ட் மாணவி வர்ஷா அபாரம்

/

தென்மேற்கு மண்டல கராத்தே :கிரசண்ட் மாணவி வர்ஷா அபாரம்

தென்மேற்கு மண்டல கராத்தே :கிரசண்ட் மாணவி வர்ஷா அபாரம்

தென்மேற்கு மண்டல கராத்தே :கிரசண்ட் மாணவி வர்ஷா அபாரம்


ADDED : மார் 19, 2026 05:27 PM

Google News

ADDED : மார் 19, 2026 05:27 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தென்மேற்கு மண்டல கராத்தே போட்டியில், வண்டலுார் கிரசண்ட் பல்கலை மாணவி வெண்கல பதக்கம் வென்று, மாநிலத்தின் முதல் மாணவியாக, அகில இந்திய போட்டிக்கு தகுதி பெற்றார்.

இந்திய பல்கலைகள் கூட்டமைப்பு சார்பில், தென்மேற்கு மண்டல அளவில் பல்கலைகளுக்கு இடையிலான கராத்தே போட்டி, மத்திய பிரதேசத்தில் உள்ள போபலில் நேற்று நிறைவடைந்தது.

போட்டியில், தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களின், 112 பல்கலைகளை சேர்ந்த நுாற்றுக்கணக்கான மாணவ - மாணவியர் பங்கேற்றனர்.

பல்வேறு சண்டை பிரிவுகளில், வயது வாரியாக போட்டிகள் நடக்கின்றன. இதில், பெண்களுக்கான 65 கிலோ 'குமிட்' பிரிவில், சென்னையை அடுத்த வண்டலுார் கிரசண்ட் பல்கலை மாணவி வர்ஷா,....... திறமையை வெளிப்படுத்தி, வெண்கலம் பதக்கம் வென்றார்.

மாநிலத்தின் முதல் மாணவியாக பதக்கம் வென்றதுடன், அகில இந்திய போட்டியில் பங்கேற்கவும் தகுதி பெற்றார்.

மாணவியை, போட்டியின் கண்காணிப்பாளர், கிரசண்ட் பல்கலை விளையாட்டுத்துறை இயக்குனர் செல்வகுமார் உள்ளிட்டோர் பாராட்டினர்.

***






      Dinamalar
      Follow us